சங்கரா கல்லூரியில் சங்கர ஜெயந்தி விழா

சங்கரா கல்லூரியில் சங்கர ஜெயந்தி விழா

  • By Admin
சங்கரா கல்லூரியில் சங்கர ஜெயந்தி விழா காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மலர் பல்லக்கில் அலங்கரித்து வேதபாராயணம் திருமுறை பாடல்களை மாணவர்கள் இசைத்து பாடினர். மாலை ஆதிசங்கரர் இயற்றிய பஜ கோவிந்தம் என்ற தலைப்பில் பேராசிரியர் ஸ்ரீ சைலம் சிறப்புரை ஆற்றினார். பின்னர் அலங்கரிக்க பட்ட புஷ்ப பல்லக்கில் மேள வாத்தியங்கள் முழங்க மாணவர்கள் திருமுறை வேதங்கள் முழங்க ஆதிசங்கரர் வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். நாம் சங்கீர்த்தனம் பக்தி பாடல்களை விடுதி மாணவிகள் பாடினர். ஹெக்சாவேர் சாப்ட்வேர் நிறுவன வேலை வாய்ப்பு அதிகாரி திரு. விஸ்வேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

News